இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரம கொவிட்-19 தொற்று உள்ளாகியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிரவீன் ஜெயவிக்ரம 5 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
எனினும், அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் ஏனைய வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்படவில்லை. என ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அண்மையில் இலங்கையின் சகல துறை வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.