திருமண பந்தத்தில் இணைந்த நீரஜ் சோப்ரா!

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் இருமுறை பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி மோரை அண்மையில்  திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் குறித்த எந்த தகவலையும் நீரஜ் சோப்ரா வெளியிடாத நிலையில், தற்போது திருமண புகைப்படத்தை   தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய இளம் ஈட்டி எறிதல் வீரரான  நீரஜ் சோப்ரா, கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய  தடகள வீரர் என்ற பெருமையையும்   நீரஜ் சோப்ரா பெற்றார். 

இதனையத்து  2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தையும் அவர்  வென்றார்.

இந்நிலையில், நீரஜ் சோப்ரா ஹிமானி மோர் எனும் டென்னிஸ் வீராங்கனையை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கரம் பிடித்துள்ளார். இவர் அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தில்  கல்வி கற்று வருகின்றார் எனவும்,  பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர டென்னிஸ் பயிற்சியாளராகப்   பணியாற்றி வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.