இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 364 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 554 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.
அதனடிப்படையில் ஆட்டமிழக்காமல் விளையாடிய அவர், 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 190 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.
பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்களையும் இழந்து 151 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அதனடிப்படையில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்களால் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.