எரிபொருள் வரிசைக்கு நடுவே நுழைய முயன்றதால் மோதல். : ஒருவர் பலி.

காலி – மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கிடையே நேற்று(7) இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகியதுடன் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக தமது மகிழுந்தில் பிரவேசித்த யடதுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர், தமது நண்பரின் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இருந்த சிறிய இடைவெளியினூடாக எரிபொருள் வரிசைக்கு நடுவே குறிந்த மகிழுந்தை நுழைக்க முயன்றுள்ளார்.

அதன்போது, வரிசையில் காத்திருந்தவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஹபராதுவ யடகல பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவரே பலியானார்.