ஓய்வு பெறும் லியோனல் மெஸ்ஸி.

எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் 2022 பீஃபா உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தினார்.

குரோஷியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், ஜூலியன் அல்வாரெஸ் அடித்த இரண்டு கோல்களுடன் பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்த அர்ஜென்டீன அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி, தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

தனது 5 ஆவது உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும் 35 வயதான மெஸ்ஸி, 11 கோல்கள் அடித்து, உலகக் கிண்ணத்தில் ஆர்ஜென்டீனா சார்பில் அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (14) நடைபெறவுள்ள பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆர்ஜென்டீனாவுடன் மோதவுள்ளது.