காரைநகர் – களபூமியில் நகையும், பணமும் திருட்டு

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்றைய தினம் 3, 1/2 பவுண் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

வீட்டில் தனியாக வசித்து வந்து 72 வயதுடைய மூதாட்டி சமுர்த்திக் கொடுப்பனவை பெறுவதற்காக  நேற்றைய தினம் பிரதேச செயலகத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு சென்ற திருடர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்று அலுமாரிக்குள் இருந்த உள் கதவை திறப்பினை எடுத்து கதவினை திறந்து இவ்வாறு நகைகளையும், பணத்தையும் களவாடி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி பொலிஸ் காவலரணில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.