காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து, ஆர்ஜன்டீனா.

உலகக் கிண்ண ஆடவர் கால்பந்தாட்ட தொடரில் ரவுண்ட் 16 இல் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

கலீஃபா சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா அணியை நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதேவேளை அஹமட் பின் அலி மைதானத்தில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் ஆர்ஜன்டீனா அணி அவுஸ்ரேலியாவை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ரவுண்ட் 16 இல் நடைபெற்ற போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலம் காலிறுதி போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து மற்றும் ஆர்ஜன்டீனா அணிகள் எதிர்வரும் 10ஆம் திகதி மோதவுள்ளன.