குதுகலித்து திரியும் பருவத்திலே…

குதுகலித்து திரியும் பருவத்திலேயே
சிட்டாய் பறக்கும் எங்களையும் மதித்திடுவீரா?
குடு குடு என ஓடித்திரிந்து
கல கல வென சிரித்திடும் எங்களையும் மதித்திடுவீரா?

 சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்வது
எங்களை மதித்தலுக்கு ஈடாகுமா?
பாவிகாள் எம்மை வதம் செய்வதனால்
எம்மில் பலர் அழிவதை அறிவீர்களோ
நீங்கள்?

சிறுவர்களை அழித்தால் உலகில் மனிதர்களே இல்லை என்பதை அறிவாயோ மானிடா?

 தீரா ஆசையை தீர்க்கவோ
மனித குலத்தை அழிக்கவோ
பிறந்த அரக்கர்களே!
மனித குலத்தை வளப்பதற்கு நீங்கள்
பணம் கொடுக்க தேவை இல்லையே
சிறுவர்களை பாதுகாத்தலே
மனித குலம் தலைக்குமே!!!

 எழுத்து – தொப்பிக்கல விதுர்சிகா
தரம் – 11
விவேகானந்தா மகளீர் இல்லம்,
வாழைச்சேனை