கொசுவர்த்தி சுருளால் 1 குழந்தை, 1 பெண் உள்பட 6 பேர் பலி.

டெல்லியில் கொசுவர்த்தி சுருள் மெத்தையில் பட்டு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர்.

சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு கொசுவர்த்தி சுருளை ஏற்றிவைத்துவிட்டு உறங்கிக்கொண்டிருந்தபோது, கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து தீப்பிடித்துள்ளது.

நச்சுப்புகையால் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் சுய நினைவை இழந்துள்ளனர்.

தீ விபத்து மற்றும் மூச்சுத்திணறலால் உறங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

2 பேர் மூச்சுத்திணறல் காரணமாக ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.