கொழும்பில் பிக்குகளினால் ஆர்ப்பாட்டம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பிக்குகளினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஸ்ரீ போதிராஜா மாவத்தையின் முன்பாக தற்போது இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே, சிறிதர்ம தேரர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் நாட்டில் அத்தியாவசிய தேவைகளின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பிக்குகள் கலந்து கொண்டுள்ளதுடன், தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் தாங்கியுள்ளனர்.