சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி

சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயு மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என தாம் கருதுவதாகவும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஆலோசனையின் பின்னர் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.