யாழ்.வடமராட்சி மந்திகை – மாக்கிரான் பகுதியில் பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தோர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் இரு ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொியவருகின்றது.
கொள்ளை இடம்பெற்ற வீட்டில் சில நாட்களுக்கு முன்பு பூப்புனித நீராட்டு விழா இடம்பெற்றிருந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல்
வீட்டிலிருந்தவர்கள் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் நடாத்தி அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.