சிறையிலுள்ள திலினி பிரியமாலியிடமிருந்து கைத்தொலைபேசி மீட்பு !

பண மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியிடம் இருந்து கையடக்க தொலைபேசியை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த கையடக்க தொலைபேசியை இன்று (10) காலை கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

வர்த்தகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடம் மோசடியான முறையில் பணத்தை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட திலினி பிரியமாலி, கடந்த 6 ஆம் திகதி கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.