யாழில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற 15 வயது சிறுமியை காணவில்லை

யாழ்.வேலணை – சரவணை பகுதியில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற 15 வயது சிறுமி காணாமல்போயுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்களே ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து காணாமல் போன சிறுமியை தேடும் பணியினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் காதல் விவகாரத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் பேசப்படுகின்றது.