சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.

வத்தளை பிரதேசத்தில் உள்ள நபரொருவருக்கு கொடுப்பதற்காக மன்னார் பகுதியில் இருந்து சொகுசு மகிழுந்தில் எடுத்துச்செல்லப்பட்ட, சுமார் ஆறு கோடி ரூபா பெறுமதியான 4 கிலோ 329 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே நேற்று (10) ஹெந்தல பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த மகிழுந்தை நிறுத்தி சோதனையிட்ட போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.