சுவர் இடிந்து 2 மாதக் குழந்தை பலி!

வவுனியா ஓமந்தை – புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வீடொன்றின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
 
நேற்று (09) மாலை இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
இந்தச் சம்பவத்தில் 2 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
 
சம்பவத்தின் போது குழந்தையின் தாயும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
 
உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஓமந்தை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.