இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் இலங்கை வருகை தந்துள்ளனர்.
முதலாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.