தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு. ; 7 பேர் பலி.

வடக்கு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்தனர்.

நேற்று இரவு 9 மணியளவில் யெகோவா சாட்சிகள் தேவாலயத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பித்து சென்றதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ள போலீசார், அவரும் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.