நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணம்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகர் மாரிமுத்து.

எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ஏமா ஏய் என்று இவர் கூறும் வசனம் மீம் ஆக மாறியது.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பலருக்கும் எதிர்ச்சியை கொடுத்துள்ளது.  

57 வயதாகும் இவருடைய மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.