நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தன்னைத் தமிழ் மக்களுக்காக ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது.
மாவீரர்களின் பெற்றோரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மாவீரர்களின் பெற்றோர், உறவுகள் மற்றும் மதகுருமார், பொதுமக்களுடன் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த அஞ்சலி நிகழ்வு தொடர்ந்தும் 12 நாட்களும் முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.