நாளைய விடியல்களில் என்னைநீ தேடவே மாட்டாய் அல்லவா……  

பரவாயில்லை இந்த இதயம்
வலிகளுக்கும், வெறுப்புகளுக்கும்
பழக்கப்பட்டதுதான்….
இதுவும் போகப்போக பழக்கப்பட்டுவிடக்கூடும்….எனக்கு

இலகுவாக நீ என்னை
தூக்கி எறிந்துவிடுவாயென்று
நான் நினைத்ததுகூட கிடையாது ….
ஆனால் என்னசெய்ய
தோள்சாய்ந்திருந்த
நேரத்தில் அணைத்தபடியேதான்
என்னை
துண்டாடியது அந்தக்கத்தி….

இப்பொழுதும் கூட நான்
நம்பவில்லை நீ என்னை….
வெறுக்கிறாயென்று ……
நாளை எனக்கு தைரியம்
சொல்லித்தட்டிக்கொடுக்கும் யாரிடமாவது
நான் உன்னை நிச்சயம்
உணரமாட்டேன்….

இப்பொழுதும் கூட
தோன்றுகிறது நீ என்னை
வெறுக்கவில்லை…..
இன்னும் இன்னும் நேசித்துக்கொண்டிருக்கிறாயென்று
ஆனால் இவையனைத்தும் என்
கற்பனைகள்தானேயென்று முற்றுப்புள்ளி
வைத்துவிட்டு நகர்கிறேன்……

யாரும் உணர்த்திடாத அன்பினை உணர்த்தினாய்
யாரும் கொடுத்திடாத வலிகளைக்
கொடுத்து நீயாகவே நகர்ந்து செல்கிறாய்….

எது எப்படிஇருந்தாலும்
சிலசமயம் அறியாமல்
நானும் கூட உன்னை காயப்படுத்தியிருக்கக்கூடும்….
அதற்காக
நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்….
நாளைய விடியல்களில் என்னை
நீ தேடவே மாட்டாய் அல்லவா……

-இசைவிழி சந்திரன்-