நினைவுகள் தொடரட்டும்…

காற்று சில் என
எப்போதும் போல்தான்
வீசிக் கொண்டிருக்கிறது
மின் மினியும்
ஒளிர்ந்து கொண்டுதான்
இருக்கிறது

நிலவும் தன்
ஒளிர்விலிருந்து
சற்றேனும்
குறையவில்லை
முழுமையாகவே
பிரகாசிக்கிறது

இராப்பூச்சிகளும்
 நடு நிசியில்
மெல்ல மெல்ல
நித்தம் போல்
சத்தமிடுகிறது

என் வீட்டு
பூனையும் நாயும்
தாமாகவே
மோதிக் கொள்கின்றன
தாமாகவே
சமாதானாம்
செய்கின்றன

எப்போதும் போல
கிறுக்கிக் கொள்வோம்
எப்போதும் போல
சிரித்துக் கொள்வோம்
எப்போதும் போல
தனித்துவமாகி கொள்வோம்

 நினைவுகள்
தொடரட்டும்..

தே.நிலா