ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் – 04 சுற்றின் நான்காவது போட்டியில், பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை ஒரு விக்கெட்டால் வெற்றி கொண்டது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நேற்று நடைபெற்ற இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து 130 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.
இதனால், பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டால் வெற்றியை பதிவு செய்தது.