பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னதாக கொடுக்க வேண்டியுள்ள கடன் காரணமாக பெட்ரோல் கம்பனிகள் கைவிரித்துவிட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என கஞ்சன விஜேசேகர மேலும் கூறினார்.
ஐ ஓ சி நிறுவனம் தருவாதாக கூறியுள்ள பெற்றோல் 23 ஆம் திகதியே வரவுள்ளது.
அதற்கு முன்னர் பெற வேண்டும் என்றால் அதிக விலைக்கே பெற வேண்டியுள்ளது.
குறைவான விலைக்கு எவராலும் பெற்றோல் வாங்க முடியும் என்றால் தமக்கு அறிவிக்குமாறு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.