பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதலாவது வெண்கலப்பதக்கம்.

இங்கிலாந்தில் பேர்மிங்ஹாமில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதலாவது பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.

நேற்று சனிக்கிழமை காலை என்.இ.சி அரங்கில் நடைபெற்ற பளுதூக்கலில் டிலங்க இசுரு குமார இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்தார்.

ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட டிலங்க இசுரு குமார மொத்தமாக 225 கிலோ கிராம்  எடையை தூக்கி முதலாவது வெண்கலப்பதக்கத்தை இலங்கைக்கு வென்று கொடுத்துள்ளார்.