யாழ்ப்பாணம் கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட பளு தூக்கும் போட்டியில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தங்கப்பதக்கத்தை தனதாக்கி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட பளுதூக்கும் போட்டியில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவி கு.குலவிழி என்ற மாணவி 59kg எடைப்பிரிவில் 72kg தூக்கி 1 ஆம் இடத்தை பெற்று மாணவி தங்க பதக்கத்தை பெற்று வவுனியா மாவட்டத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இம் மாணவிக்கு பயிற்றுவிப்பாளராக ஜீவனின் நெறிப்படுத்தலில் இம் மாணவி தயார் படுத்தப்பட்டு பளுதூக்கும் போட்டியில் பங்கு பற்றி பதக்கத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.