மாற்றுத்திறனாளிகள் 78 குடும்பத்திற்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு.

வவுனியா மாவட்ட செயலக சமூக சேவைகள் (மத்திய) பிரிவின் ஏற்பாட்டில் உதவி மாவட்ட செயலாளர்  அவர்களின் தலைமையில் வரோட் மற்றும் ஓகான் நிறுவனத்தின் 78 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு றகமா நிறுவனத்தின் அனுசரனையுடன் விதைகள் மற்றும் விவசாய உபகரணங்கள்  நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

விதைகள் (கத்தரி, மிளகாய், கீரை, அவரை, பயற்றை, முள்ளங்கி) தெளி கருவி, பூ வாளி, பசளை 20kg பொலித்தீன் பைகள் உள்ளடங்கலாக தலா ஒரு நபருக்கு  6000 ரூபாய் பெறுமதி கொண்ட விவசாய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் றகமா நிறுவனத்தின் தலைவர், திட்ட இணைப்பாளர், ஓகான் நிறுவனத்தின் பிரதிநிதிகள், வரோட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.