சிறுவர்களிடையே பரவும் வைரஸ் – காதார துறையினர் எச்சரிக்கை

Mother hand holding child hand who have IV solution in the hospital with love and care

கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் சிறுவர்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நோய் இலகுவாகப் பரவும் எனவும், ஒரு தடவை தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாராசிட்டமால் போன்றவற்றைக் குடிக்கக் கொடுத்து வீட்டில் ஓய்வெடுக்க வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது கொடிய நோயல்ல என்றும்,

6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.