ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 100க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்றைய தினம் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் மீனவர்கள் மீன்களைப் பிடித்துக் கொண்டு கரை திரும்பினர்.
இதையடுத்து பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒரு வலையில் அரியவகை இறால் இனங்களை சேர்ந்த மணி சிங்கி இறால் சிக்கி உள்ளது.
அதனுடைய எடை சுமார் 2.5 கிலோ என தெரிய வந்துள்ளது.
குறித்த இறால் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதால் மீனவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்த அரியவகை இறால் மருத்துவ குணம் உள்ளதால் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.