முதலிடத்தில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க.

இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடரில் இதுவரை அதிக விக்கட்டுக்களை இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க 15 விக்கட்டுக்களை கைப்பற்றியதன் வாயிலாக முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

Wanindu Hasaranga

இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடரில் நெதர்லாந்து அணியை சேர்ந்த De Leede 13 விக்கட்டுக்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றார்.

12 விக்கட்டுக்களை கைப்பற்றி சிம்பாப்வே அணியின் Blessing Muzarabani, மூன்றாம் இடத்தில் காணப்படுகின்றார்.