முல்லைத்தீவில், தந்தம் எடுத்த கும்பலை தேடி வலைவீச்சு.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட  மூன்று முறிப்பு இயற்கை ஒதுக்கிடத்தின்  ஐயம்பெருமாள் பிரதேசத்தில் காட்டுப் பகுதியில் இருபத்தைந்து வயது மதிக்கதக்க ஏழு அடி உயரமான ஆண் யானை ஒன்று தும்பிக்கையை வெட்டிய நிலையில்  கடந்த 16 திகதி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினரால் இனங்காணப்பட்டுள்ளது.

யானையின் தந்தத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் குறித்த யானை கொல்லப்பட்டு இருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கருதுகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. எனவும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளார்கள்.