அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

பச்சரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை நேற்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் வௌ்ளை பச்சரிசி மற்றும் சிவப்பு பச்சரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகும்.

அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் அரிசியை விற்கவோ, வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.