வடக்கில் ஆபத்தாகும் கிராமங்களின் எல்லைகள்!

வடக்கில் சில கிராமங்கள், நகரங்களின் எல்லைகள் தவறாக நிரணயிக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.

ஓவ்வொரு கிராமங்களுக்கும் ஒவ்வொரு பாரம்பரியங்கள் இருக்கின்றன. வரலாறுகள் இருக்கின்றன. வேறு வேறு பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.

எல்லைகளை மாற்றி அந்த ஊர்களின் பெயர்கள் வருகின்றபோது, ஊர்களின் தனித்துவங்களும், அவற்றினது வரலாறுகளும் மாறிவிடும் அபாயம் உள்ளது.

உதாரணத்திற்கு  A9 வீதியில் இயக்கச்சி உள்ளது.

இது கிளிநொச்சி மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது.

வீதியில் ஊரின் தொடக்க எல்லை முடிவு எல்லைகள் பெயர்ப் பலகை வைத்து அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.

யாழிலிருந்து கிளிநொச்சி போகும் போது இயக்கச்சி ஊரின் எல்லையின் பழைய பெயர் பலகை முதலில் வரும். இது 274KM தூரக்கல்லுக்கு அருகில் இருக்கிறது.

இதிலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் புதிய இயக்கச்சி பெயர்ப் பலகை இருக்கிறது.

அதிலிருந்து கிளிநொச்சி நோக்கி தொடர்ந்து பயணிக்கும் போது இயக்கச்சியின் அடுத்த எல்லை (முடிவு) பெயர்ப்பலகை வரும். இது புதிய பெயர்ப்பலகை.

இங்கு தான் புகழ்பூத்த றீச்சா பண்ணையும் உள்ளது. இங்குதான் ஒல்லாந்துக் கோட்டையும் உள்ளது.

 இயக்கச்சி என்பது பழைமை வாய்ந்த ஊராகிய போதும் புதிய பாதை அபிவிருத்தி செயற்பாடுகளின் போது எப்படி அதன் பழைய எல்லைகள் மாற்றப்படுகின்றது?

இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் பாரதூரமானவை.

இவை இதுவரை உணரப்படாதிருக்கிறது.

இயக்கச்சியை சேர்ந்த இளம் தலைமுறையினருக்கு தாங்கள் வாழும் ஊரின் எல்லைகளை திருத்தமாகவும் உறுதியாகவும் எடுத்துரைக்க முடியாதது வியப்புமிக்கது.

வரலாற்று ஆய்வுகளுக்கு பொறுப்பாக பதிலளிக்கும் வகையில் எத்தகைய பதிவுகளையும் எங்கும் பேணாதது ஆச்சரியமளிக்கின்றது.

அல்லது பேணும் பதிவுகளை இலகுவாக பார்வையிடவோ அல்லது அறிந்து கொள்ளவோ முடியாத நிலை இருக்கிறது.

பழைமையான ஊர்களின் எல்லைகளை சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றும் நடைமுறை ஏற்புடையதல்ல.

எல்லைகள் மாற்றப்படாது அபிவிருத்திகளை திட்டமிடுதலும், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாற்றங்களை பதிவு செய்து நூலகங்களில் பேணுவதும் வரலாற்றாய்வாளர்களும் கடந்த காலங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளவும் ஆவண செய்ய வேண்டும்.

இயக்கச்சி போல வடக்கில் பல ஊர்களின் எல்லைகளை மாற்றிக்கொடண்டே இருக்கின்றனர்.

துறைசார்ந்த அதிகாரிகளிடம் இதுபற்றிய போதிய அறிவில்லாமையை அவதானிக்க முடிந்தது.

எத்தகைய புதிய மாற்றங்களும் ஆவணங்களாக்கப்பட்டு பிரதான நூலகங்களில் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் தகவல்களை பேணுவதில் கவனமெடுக்க வேண்டும்.

இதுவே நமது இருப்பை நீண்ட காலங்களுக்கு பயனுடையதாக்கிக் கொள்ளும்.

ஆய்வும் ஆராய்சியும் ஊகி.