பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார்.
குறித்த பெண் வரிசையில் நின்ற போது பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் பொரளை – காசல்வீதி மகளிர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
குழந்தையை பிரசவித்த பெண் நேற்று முதல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக குறித்த இடத்தில் காத்து நின்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.