புலியுடன் விளையாடிய பூங்கா ஊழியருக்கு நடந்த சோகம்.

மெக்சிகோவில் உணவு வழங்கும் பூங்கா ஊழியரின் கையை புலி கடித்து குதறிய வீடியோ இணையத்தில் வைரலகி வருகிறது.

பெரிபன் நகரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் விலங்களுக்கு உணவு விநியோக பணியில் ஊழியர் ஜோஸ் ஈடுபட்டார்.

கூண்டில் உள்ள புலியுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஊழியரின் கையை புலி கடித்துக்குதறியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.