விண்வெளியில் உள்ள சீன விண்வெளி நிலையத்திற்கு குரங்குகளை அனுப்பி அதன் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறையை ஆராய்ச்சி செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பூஜ்ஜிய புவியீர்ப்பு சூழலில் குரங்கின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறையைத் தெரிந்து கொள்ள இந்த ஆராய்ச்சி உதவும் என்றும், விலங்குகளைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் மனிதர்கள் விண்வெளியில் வாழத் தேவையான கூற்றுகளைத் தெரிந்து கொள்ள முடியும் என்றும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.