விமான ஜன்னல் வழியாக செல்போன் வாங்கும் விமானி. (வைரலாகும் காணொளி)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் மறந்து விட்டு சென்ற செல்போனை விமானி  விமானத்தின் ஜன்னல் வழியாக வாங்கும்  காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் அவசரத்தில் தனது செல்போனை மறந்து விட்டு விமானத்தில் ஏறியுள்ளார்.

இதனைக் கண்ட விமான நிலைய ஊழியர்கள் அந்த செல்போனை எடுத்து  விமானி  மூலம் உரிமையாளரிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

விமானம் புறப்பட தயாரான நிலையில் ஜன்னல் வழியாக அந்த செல்போன்  விமானியிடம்  வழங்கப்பட்டது.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.