இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 15,666 பேர் வருகை தந்துள்ளதாக அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து 4,347 பேரும், பிரித்தானியாவில் இருந்து 1,360 பேரும், சீனாவில் இருந்து 1,063 பேரும், பங்களாதேஸில் இருந்து 867 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் .

இதன்படி கடந்த மாதத்தில் 112,128 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது