தனியார் பேருந்து விபத்து ; 12 பேர் காயம்

தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி மரமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெலவத்தை – நெலுவ வீதியில் உள்ள யட்டபொத பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

பேருந்தில் பயணித்த சுமார் 12 பேர் இவ்விபத்தில் சிக்கி காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரத்தில் மோதிய பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளது.