இரத்தினபுரி மாவட்டத்தின் நியமனப் பட்டியலில் நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவில் கையொப்பமிடுவதற்காக இன்று (11) இரத்தினபுரி மாவட்டச் செயலகத்திற்கு வந்தபோதே குறித்த பட்டியலில் அவரது பெயர் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிதா அபேரத்ன நேற்று (10) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.