யாழ்.பருத்தித்துறையில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு – 6 பேர் காயம்

யாழ்.பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

வீதியில் பயணித்த ஒருவருக்கும் சுப்பர்மடம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு வந்த சிலர் கைகலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றது.

இதில், இரு தரப்பிலும் தலா மூவராக ஆறு பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.