பாக்கிஸ்தானில் அரசியல்பேரணியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்லாமிய கட்சி ஒன்றின் பேரணியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
பாக்கிஸ்தானின் வடமேற்கு பஜாவூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியை சுற்றிவளைத்துள்ள பொலிஸார் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.