மாத்தறை மிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காரில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் குழுவொன்றினால் உணவகம் ஒன்றின் முன்னால் வைத்து அதன் உரிமையாளர் இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த 32 வயதுடைய நபர் உணவகத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த போது வேனில் வந்த குழுவினர் T-56 துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அஹங்கம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.