வில்லியம்சன் தலைவர் பதவியில் இருந்து விலகல்!

நியூசிலாந்தின் T20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் பதவிகளில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளதாக கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிரிக்கெட்டைக் கடந்து இனிமேல் தனது குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுடன் நேரத்தை கழிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு இருப்பினும் நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து பங்களிக்க தயாராக இருப்பதாகவும், வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளதாகவும் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

கேன் வில்லியம்சன் மூலம் வழிநடாத்தப்பட்ட நியூசிலாந்து அணியானது இம்முறைக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.