பொசன் போயாவை முன்னிட்டு 173 கைதிகள் விடுதலை

பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அபராதம் செலுத்தாமை உள்ளிட்ட சிறிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பொலன்னறுவை, கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, பல்லன்சேனை, வவுனியா, யாழ்ப்பாணம், காலி, பல்லேகல மற்றும் திருகோணமலை சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகளும் விடுதலை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.