200 அடி பள்ளத்தில் விழுந்து மகிழுந்து விபத்து!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
 
நேற்று (06) மாலை காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
 
விபத்தில் மகிழுந்தில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
விபத்தின் போது மகிழுந்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பயணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
 
இதேவேளை மகிழுந்து இருக்கைப் பட்டியை அணியாமையினால் ஒருவருக்கு மாத்திரம் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்