246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தி உள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 378 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து, 147 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 360 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.

இதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இலங்கை அணி, 508 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதனைத்தொடர்ந்து 508 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 261 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனால், இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.