30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை

இலங்கையில் 30 வருடங்களுக்கு பின்னர், இலங்கை அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

1992ம் ஆண்டிற்கு பின்னர், இலங்கையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அரசின் மீதான அதிருப்தியும் பொருட்களுக்கான விலையேற்றமும் தொடர்கிறது இப்படியான அமைதியற்ற சூழலில் மக்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சிதரும் செய்தியாக இந்த வெற்றி பார்க்கப்படுகின்றது.