ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்கு சொந்தமான 2 மீன்பிடி படகுகள் மற்றும் ஒரு டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.