5 வயது சிறுவனை பாலத்தில் இருந்து வீசிய பெண்

வத்தளை – மட்டக்குழி எமில்டன் பிரதான பாலத்தில் 5 வயதான சிறுவனை பெண்ணொருவர் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அதே பாலத்தில் குறித்த பெண்ணும் குதிக்க முயற்சி செய்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற பகீர் சம்பவம்: 5 வயது சிறுவனுக்கு பெண்ணால் நேர்ந்த கொடூரம்

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொது மக்கள் அந்த பெண் பாலத்தில் குதிப்பதை தடுத்துள்ளதுடன் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாலத்தில் வீசப்பட்ட சிறுவனை அங்குள்ள பொது மக்களும் கடற்தொழிலாளர்களும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் இன்னும் சிறுவன் பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.

இலங்கையில் இடம்பெற்ற பகீர் சம்பவம்: 5 வயது சிறுவனுக்கு பெண்ணால் நேர்ந்த கொடூரம்

இதேவேளை சிறுவனை பாலத்தில் வீசியது அவருடைய தாயாரா? என்ற சந்தேகத்துடன் குறித்த பெண்ணை பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.